வணங்கி மகிழுது வங்க அலைகள்
வடிவழ கூட்டுது சங்கத் தமிழும்
ஜனங்கள் கூட்டம் பேத மின்றி
சங்கம மாகுது கடற்கரை யோரம்!
புண்ணிய பாவ புனரமைப் பினில்
புதிய ஏற்பா டொன்று அமைய
கண்ணியம் காட்டும் கருணை மாதா
கையசைக் கிறாள் காண்போர்க் கெல்லாம்!
நன்னிலம் வந்த நமக்கோர் வாழ்வை
நானிலம் போற்ற அமைத்துத் தந்து
பன்னிரு மாதமும் பசிபிணி போக்கும்
அன்னையை வணங்க அனைவரும் வாரீர்!
நாகையின் தெற்கே நற்பரப்பான வேளாங்கண்ணி
கூடிக் களைவீர் குறைகள் யாவும்
ஈகை ஒன்றே இலக்கென அமைந்த
இல்லந் தானிந்த இனிய ஆலயம்!
No Comment! Be the first one.