அன்னமிட ஆயிரம் கை
அறிவளிக்க அதன திகம்
ஒன்று மிடர் ஒழித்தெறிய
ஒன்றி வரும் மாதாகை!
அண்டி வருவார் மனதில்
அடுத்து றையும் மரியாள்
கண்டதிலை வேற்றுமை பார்
காணுவதோ சமத்துவ மே!
என்றும் நலம் பெருக்க
இவ்வைய மடி மீது
இன்றும் விழித் தோர்த்து
இருப் பவளும் தாயளவோ!
அழைக்க அன்னை மனம்
அன்போடு நெகிழ்ந் துருகும்
குழைத்த தேன் பாகாய்
குவலய நா தான்பருகும்
புவிகாக்க வந்த வளின்
புண்ணியத் திருத் தலத்தில்
செவிப்பாயும் மாதா புகழ்
சீரன்றோ யாவ ருக்கும்!
ஆலயத்தில் அவளி ருப்பு
அவனிக்கே பெரும் சிறப்பு
கோளவளின் இயக் கமுற்று
கொடுக்கட்டும் நற் பலனே!
ஆனையூரான்
No Comment! Be the first one.