குடி
சாராயமடிச்சா போதை வரும்
சங்கடமும் கூட வரும்
இறப்புக்கு ஓலை வரும்
இல்லத்தில் வறுமை வரும்!
பொழப்புக்கு கேடு வரும்
பொய்யுந்தான் சொல்ல வரும்
உழைக்க அலுப்பு வரும்
ஊரு மொத்தம் பேசவரும்!
நோயெல்லாம் கூடி வரும்
நோன்பு நித்தம் இருக்கவரும்
பாயோடு படுக்க வரும்
பாடைக்கு நாளும் வரும்!
கொண்டாடும் குடி யதனால்
திண்டாடும் நிலைமை வரும்
திண்டாடும் நிலையும் வந்தால்
திருடத்தான் எண்ணம் வரும்!
குடிகுடிய கெடுக்குதடா சாமி
குடியினால குலையுதடா பூமி
படிப்படியா நிறுத்துங்கடா குடிய
பாரினிலே நல்லபொழுது விடிய!
No Comment! Be the first one.