நித்தம் நித்தம் ஏக்கம்
நிற்க வில்லை தூக்கம்
அத்து மீறும் மனசு
ஆக வில்லை லேசு
கண்டுக் காமல் போனாய்
காதல் போகும் வீணாய்
ஒண்டு எந்தன் பக்கம்
உண்டு உனக்கும் சொர்க்கம்!
காலம் பொன்னு மென்பர்
கருத்தில் கொண்டு வந்தால்
காதல் கூடப் பொன்னே
கட்டிக் கொள்ளு கண்ணே!
துவங்கும் இரவு நெருங்க
துலங்கும் நிலவு எழும்ப
துவட்டி வியர்வை நீக்க
துடிக்கு தின்பத் தென்றல்!
வரவைப் பெருக்கும் நேரம்
வந்து நிற்கு தோரம்
உறவைத் தொடங்க ஈரம்
உனக்கும் இருக்கும் பாரம்!
கலந்து காணும் மாயம்
கரைந்து மனதில் ஓயும்
அளந்து பார்த்து மகிழ்வோம்
அன்பு தன்னில் வீழ்வோம்!
No Comment! Be the first one.