வாழ்க்கை என்பது புல்லாங்குழல் மாதிரி,
ஓட்டைகள் பல இருக்கும்! சரியாக கையாள பழகிக் கொண்டால்,
வாழ்க்கை என்றும் இன்னிசை தான்!
மரணத்தின் கையில் இருப்பவன்,
வேண்டாத தெய்வங்களே இல்லை.
கஷ்டத்தின் கையில் இருப்பவன்,
திட்டாத தெய்வங்களே இல்லை.
வலித்தாலும் சிரித்துக் கொண்டே கடக்க பழகிக் கொள்.
ஏனெனில், ஆறுதல் தந்து தேற்றுபவரை விட,
ஆயுதம் ஆக்கி தூற்றுபவர்கள் தான் அதிகம் இங்கே
சொல்லித் தந்துவிட்டு பின்னர் தேர்வு வைப்பவர் ஆசான்.
தேர்வு வைத்துவிட்டு பின்னர் சொல்லித் தருபவர் வாழ்க்கையார்.
வகுப்பில் விளையாடினால் மதிப்பெண் குறையும்,
வாழ்க்கையில் விளையாடினால் நம் மதிப்பு குறையும்!
சிந்தித்து பின் செய்தால் அது வெற்றி.
செய்த பின் சிந்தித்தால் அது அனுபவம்.
இருக்கும் போது மரியாதையை தருவதோ பணம்.
இறந்தபின் மரியாதையை தருவதோ குணம்.
எல்லோருக்கும் கொடுக்கவும் முடியாது,
எல்லாரிடமும் எதிர்பார்க்கவும் கூடாது.
மரியாதை…!
கெடுத்து ரசிப்பதோ பாவம்.
கொடுத்து மகிழ்வதே புண்ணியம்
No Comment! Be the first one.