நிலம்காயும் நிலத்தடி நீர்மாயும்
வளரும் செடி கருகும்
வளர்த்த மரம் பட்டுப்போகும்
நிலத்தடி உயிர்கள் நெக்குருகும்!
ஊறாது ஊர் கிணறு
உள்வெடிக்கும் பேராறு
தேறாது வன விலங்கு
தெருவெங்கும் வெப்ப ஆறு!
ஏர்முடங்க பஞ்சம் வரும்
எவ்வூரும் வறட்சி வரும்
பார்வளத்தில் மாற்றம் வரும்
பல்லுயிருனுக்கும் ஏமாற்றம் வரும்!
மழைவந்தாலே மாற்றம் வரும்
மண்ணில் புது தோற்றம் வரும்
மழை யில்லா உலகினுக்கு
மகத்துவந்தான் ஏது வரும்?
மழைதானே மனிதனுக்கு சாமி
மாரியிலை ஏதுயிந்த பூமி
அழையந்த வருணனையும் நித்தம்
அடைமழையே வாழ்வளிக்கும் மொத்தம்!
No Comment! Be the first one.