உறவொன்று சலியாது
உயிர்த்திட செய்வதால்
உத்தமி உடலும் வாழும்
இரண்டென்று மூன்றென்று இறக்கியே வைப்பதால்
பத்தினி பாவம் சேரும்
செல்வமென பிள்ளைகள் சேர்வதால் தொல்லையே
நல்லதாய் ஒன்று போதும்
இல்லறம் இனிதுற இன்பமும் குறைவிலை
உள்ளிதை உறவு தோறும்!
பெருக்கமும் நெருக்கமும் பிழைகூட சாத்தியம்
இருப்பது இல்லை ஆகும்
வருத்தமும் துயரமும் வருமானம் போதாமல்
வாழ்கையே நொந்து போகும்
பிறத்தலைத் தடுத்திடல் பிழையல புரிந்திடு
பெண்களும் பாவ மன்றோ
பிறப்பதை தடுத்திடா பிழையதை கூட்டினால்
மண்பதை வீழு மன்றோ!
No Comment! Be the first one.