கனவில் வீழ்ந்தேன் கண்ட கணத்தில்
கைகளில் வீழ கனவும் கண்டேன்
மனதில் வீற்றாள் மயங்கிப் போனேன்
மைவிழி யசைவில் மறந்தேன் உலகை!
பொய்யில் புனைந்தேன் புதுக்கவி நூறு
நெய்த கவியோர் நீண்ட ஆறு
தையல் அழகின் தனித்துவம் பாடி
பொய்யா புலவன் புவிதனில் ஆனேன்!
போதை யவளை புகழ்ந்தது முதலே
புகவே இல்லை புத்தியின் அசலே
காதைத் தழுவிய கவிகளின் ஓசை
காதல் உலகின்
காவிய பாஷை!
அவளே எனக்கு அக நானூறு
அவளிலை அடைவேன் புற நானூறு
தகவே திருக்குரல் தந்தாள வளும்
தழுவி மகிழ்வேன் சிந்தா மணியை!
திருப்புகழ் பாடி தீபம் காட்ட
திருமகள் என்னுள் தீயு மூட்ட
ஒருமுறை படித்தேன் உறவுப் பாடம்
உண்டோ இனியோர் உயரிய சொர்க்கம்!
No Comment! Be the first one.