அனைவர்க்கும்இனிமையாகஇருக்க அந்த இறைவனானாலும் கூட முடியாது மாறாக
அனைவரிடமும் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க முயற்சி செய்.
நாளை எல்லாம் மாறும் என்று உனக்குள்ளே ஆறுதல் சொல்வதையும் விடுத்து ,
இன்று என்ற இந்த நிஜ உலகினில் உன் முயற்சியை கையாள பழகிக்கொள்.
இழந்த பின்னும் வாழ வேண்டுமா ?முயற்சிகளை கைவிடாதே …!
இறந்த பின்னும் வாழ வேண்டுமா ? சாதனைகளை செய்ய அஞ்சாதே …!
நேர்மையாக இங்கு வாழ்ந்தால் அஞ்சுபவன் என்றுதான் இந்த முட்டாள் உலகம் சொல்லும்.
உண்மையாக இருந்தால் ஏமாற்றத்தான் இந்த உலகம் பார்க்கும்.
எதுவுமே இங்கு உனதல்ல இது புரியும் தருணம் நீ உணர்வாய் ஒரு
நிஜமான மனநிறைவான உண்மையை…!
அமைதிக்கான வழியும் உனக்கு அன்றுதான் கிடைக்கும்…!
மன உறுத்தல்கள் என்றுமே ஒரு கொடிய விஷம்.
உன் தன்னம்பிக்கையை கெடுக்கும் கூர்மையான ஆயுதம்.
இரக்க குணமும் தயாள மனமும் கொண்டு ஒருவருக்கு உதவ
முன்வரும் அனைவரும் திக்கற்ற உயிர்களுக்கு உதவும் கடவுள் போலவே…!
நம்பிக்கை வைத்தால் காத்திரு.
அன்பு இருந்தால் காதல் செய்.
வலி தாங்கும் இதயம் இருந்தால் வாழ்ந்து காட்டு.
நிலையானகுணம், தூய்மையானஅன்பு, மகிழ்ச்சிகரமான மனம்
எவனிடம் உள்ளதோ அவனே இங்கு கொடுத்து வைத்தவன்.
சில சமயம் புன்னகை கூட பாசாங்காக இருக்கலாம்.
வாய் மொழிகளில் உண்மைத்தன்மை மறையலாம் ஆனால்
கண்களின் மொழிகள் என்றுமே பொய் ஆகாது
உண்மையான வாய்ப்புகள் தேடி வரும்போது அதை பிரகாசப்படுத்திக்கொள்.
இந்தவெளிச்சத்தைவைத்து தான் உனது வாழ்க்கை
என்னும் இருண்ட இரவுகளை வெளிச்சமாக்க முடியும்.
No Comment! Be the first one.