இன்பம் பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட! நலமும் வளமும் என்றும் சூழ்ந்திட !அன்னைத் தமிழ் மணம் பரப்பி வாழ்ந்திட வாழ்த்துகிறோம் !

அன்பு பொங்க, ஆசைகள் பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்!

தித்திக்கும் தமிழ் போல பொங்கட்டும் பொங்கலது புதுப்பானை பொங்கல் போல பிறக்கட்டும் புதுவாழ்வு திகட்டாத கரும்பு போல இனிக்கட்டும் மனிதனின் மனது அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

தைபிறந்தால் வழி பிறக்கும்; தடைகள் தகரும்; தலைகள் நிமிரும்; நிலைகள் உயரும்; நினைவுகள் நிஜமாகும்; கதிரவன் விழிகள் நல்ல விடியலை கொடுக்கும்; அவலங்கள் அகலும்! இதயம் கனிந்த தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!

இல்லம் எனும் பானையில் பாசம் என்னும் பாலூற்றி.. அன்பெனும் அரிசி இட்டு.. நேசம் என்னும் நெய் ஊற்றி… இன்பம் என்னும் இனிப்பிட்டு உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சி என்னும் பொங்கல் பொங்கிட இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!

நோயற்ற சுகத்தை பெற்று மாசற்ற செல்வதை பெற்று அன்புடைய சுற்றத்தை பெற்று இதயத்தில் இன்பத்தை பெற்று மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.. இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள்!!

வெல்லம், பால் மற்றும் உலர் பழங்களின் இனிப்பு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிமையான வாழ்க்கையை தரட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்…

பொங்கலோ பொங்கல் என பொங்கட்டும் இல்லத்தில் அன்பும், அறனும் பெருகட்டும், இன்றுபோல் என்றும்! மனமார்ந்த தைத்திருநாள் வாழ்த்துக்கள்!

தரணியெங்கும் கொண்டாடும் தைப்பொங்கல் திருநாளில் பொங்கலோடு இணைந்து அனைவர் மனங்களும் இன்பத்தில் பொங்க.. பொங்கல் வாழ்த்துக்கள்!

பொங்கல் திருநாளில் மனநிறைவு பொங்கட்டும், நல்ல அதிர்ஷ்டமும் செழிப்பும் உங்கள் வீட்டில் காலடி எடுத்து வைத்து வெற்றி உங்கள் கால்களைத் தொடட்டும். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

வீட்டைப் புதுப்பிக்கும்போது, உங்கள் வாழ்க்கையை அதிக மனநிறைவோடும், சிரிப்போடும், நல்ல ஆரோக்கியத்தோடும் புதுப்பிக்க வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

பயிர்த் தொழில் என்பது உயிர்த் தொழிலாம்.. உழுது உழைப்போரும் உறுதுணை நிற்ப்போரும் உண்டு களிப்பொரும் வந்தனை செய்து சூரியனை நன்றி சொல்வோம்!! தரணி செழிக்க.. பொங்கலோ பொங்கல்!!!

எங்கோ ஒருவரின் உழவால் நம் உணவு நிச்சயமாகின்றது! ஏர் கலப்பை பூட்டி உழவு செய்து, உணவளித்து உயிர் காக்கும் அனைத்து உழவர்களுக்கும் துணை உழவரகளான காளையர்களுக்கும் இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!

மஞ்சள் கொத்தோடு, மாமரத்து இலையோடு, இஞ்சித் தண்டோடு, எறும்பூரும் கரும்போடு, வட்டப் புதுப்பானை வாயெல்லாம் பால்பொங்க, பட்டுப் புதுச்சோறு பொங்கிவரும் பொங்கலிது! பொங்கல் வாழ்த்துக்கள்!

இந்த இனிய திருநாளில் இறைவனை வணங்கி, பொன், பொருள், மகிழ்ச்சி இவ் அனைத்தும், அரும்சுவை பொங்கல் போல் உங்கள் வாழ்க்கையில் பொங்கிட, என் மனமார்ந்த பொங்கல் மற்றும் தைத் திருநாள் வாழ்த்துக்கள்!

சூரியன் தன் ஒளிக் கற்றை, இந்த பூமியின் மீது செலுத்துவதைப் போன்று, உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பரவட்டும்! பொங்கல் வாழ்த்துக்கள்