புன்னகையென்பது
குழந்தைகளின்
ஆகச்சிறந்த
உயிர்மொழி
அப்பாவிற்கான
மகளின்
அழகிய சைகைகள்
அம்மாவிற்கான
மகனின்
மௌன தூது
ஏழை வீட்டில்
எப்போதும் தீராத
உணவு
வசதி படைத்தவனின்
நோய் தீர்க்கும்
விலை உயர்ந்த மருந்து
வேறொன்றுமில்லை
ஒரு
மகிழ்வின்
வெளிப்பாடு
ஒரு
வெற்றியின்
அடையாளம்
ஒரு
தோல்வியின்
மறதி
ஒரு
தெய்வத்தின்
செயல்
புன்னகையென்பது
வேறொன்றுமில்லை
இதழ்களின்
நடனம்
முகங்களின்
பாவனை
மனங்களின்
அசைவு
மனிதனின்
தனி இசை
No Comment! Be the first one.