கண்ணி றைந்த கன்னியவள் மாதா
கருத்த றிந்து கரமளிக்கும் தாயார்
பெண்ணி யத்தின் சக்தியவள் மண்ணில்
பெருமை கொள்ள பெரும் சக்தி அவளே!
எண்ணி றந்த உயிர்களுக்கு உயிரே
எவரெ னினும் அழைத்ததுமே வருவாள்
அன்னை மனதா லயமே சென்று
அவர்கு றைக்கு தேடிடலாம் விடிவு!
பசிபிணி நீக்கும் பவலோற்பவ மேரி
வசியப் படுவாள் வாஞ்சையுடன் அழைக்க
நிசியெனினும் நேரம் காலம் பாரா
நீயழைத்தா லுடனே நிச்சயமே வருவாள்!
அன்னை வந்தால் அகலுமெந்த குறையும்
ஆட்டும் பிணியத் தனையும் மறையும்
திண்ண மவளைநீ தெண்டனிட்டு அழையும்
தீரு முந்தன் தீராத வலியும்!
ஆனையூரான்