ஒழுக்கம் போர்க்களம் போன்றது.
நாம் ஒழுக்கத்தோடு வாழ வேண்டுமானால்,
ஓயாமல் மனதோடு போராட வேண்டும்
ஆடம்பரம் அதிகமாகிக் கொண்டே
போனால் உண்மையான வீரமும்,
ஒழுக்கங்களும் அகற்றப்பட்டுவிடும்.
அறிவின்மை கேவலம். அதைவிடக் கேவலம்
அறிய மனமில்லாமை.
அன்பு நிறைந்த இன்சொல்,
இரும்புக் கதவைக்கூடத் திறக்கும்.
வாழ்கையை ரசிப்பவர்கள்
நீண்டகாலம் வாழ்கின்றனர்.
பணிவான சொல் வாழ்க்கைப்
பாதையை எளிதாக்குகிறது.
உங்கள் கௌரவம் உங்கள் நாக்கின்
நுனியில்தான் இருக்கிறது.
மூடர் இறுதியில் செய்வதை, அறிவாளி
ஆரம்பத்திலேயே செய்துவிடுவார்.
மனம் நரகத்தை சொர்க்கமாக்கும்,
சொர்க்கத்தை நகரமாக்கும்.
நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும்
நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்.
வாழ்க்கையின் இன்ப துன்பங்களை சமமாய் ஏற்றுப்
பாவிக்கிற மனிதன் முறையான கல்வியைப் பெற்றிருப்பான்.
தீய செயல்கள் நம்மைத் துன்புறுத்துவது,
அவற்றைச் செய்த காலத்தில் அன்று.
வெகுகாலம் சென்று அது ஞாபகத்திற்கு வரும்போதுதான்.
அமைதி நிறைந்த அடிமைத்தனத்தை விட
ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது.