மரியாள்
காலை யெழுந்து கண்ணை கசக்க
முன்னே நிற்கும் முகத்தாள்
வேளை தோறும் விரைந்தகம் கூடி
நாளை நகர்த்தும் மரியாள்!
உள்ளும் புறமும் உறையா துன்பம்
ஒளியைப் பாய்ச்சி துடைப்பாள்
அல்லும் பகலும் அகலா வண்ணம்
அமர்ந்து நெஞ்சில் இருப்பாள்!
விழியசைத் தெந்த வினைவெதிர் எனினும்
விரட்டி ஓடி அடிப்பாள்
விதியெனில் கூடும் வேண்டா நிகழ்வை
விளங்கும் கணமே துடிப்பாள்!
இருபா லுலகை ஒருதாய வளே
இருந்து காக்கும் அன்னை
இருப்போர் நலத்தை என்றும் காக்கும்
இருதயத் துடிப்பே அவளும்!