கற்பெனில் என்ன கன்னியர் கேட்கும்
காலம் நெருக்கத்தில்
சொற்போர் நடத்தனும் சொல்வது விளங்க
சுருங்க மொத்தத்தில்!
புதுமை யென்பதை புணரும் மங்கையர்
பொழுதும் மயக்கத்தில்
இதுதான் இன்றைய இயல்பில் ஒன்று
ஏற்பார் தயக்கத்தில்!
சமத்துவப் பொருளை சரிக்கும் அறியா
மமதை புழக்கத்தில்
தமைத்தான் அடக்க தன்னால் இயலா
தலைக்கணம் உச்சத்தில்!
எங்கே போகுது எம்குல பெண்டிர்
இல்லறத் திருவெட்டில்
சங்கை ஊதும் சரித்திரம் நாளை
சந்ததிப் பேரேட்டில்!