உலகில் உள்ள மதங்கள் யாவும்
மனிதமாக மலர வேண்டும் !
உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி
பேதம் எல்லாம் ஒழிய வேண்டும் !
உணவு தேடி பசியில் வாடும் ஏழை
இல்லா நிலைமை வேண்டும் !
நாடு நாடாய் விரட்டி அடிக்கும்
அகதி இல்லா பூமி வேண்டும் !
உன் நாடும், என் நாடும், ஒன்றோடு ஒன்றாகி,
ஓர் நாடாய் ஆவதுற்கு அன்பு ஒன்று போதாதா ?
துப்பாக்கி வேண்டாம், குண்டுகள் வேண்டாம்,
வேற்றுமை பரப்பும் பாசிசம் செய்ய வேண்டாம் !
நீ செய்ய வேண்டாம் !
நான் செய்ய வேண்டாம் !
நாம் செய்ய வேண்டாம் !
யுத்தங்கள் வேண்டாம்,
சத்தங்கள் வேண்டாம்,
முத்தங்கள் போதும்
இரத்தங்கள் சிந்த வேண்டாம் !
நீ சிந்த வேண்டாம் !
நான் சிந்த வேண்டாம் !
நாம் சிந்த வேண்டாம் !
சிந்தித்தால் மட்டும் போதும் .
No Comment! Be the first one.