ஆழ்கடல் சுழியோடிகள் என்பவர்கள் சங்க காலம் முதல் இன்று வரை எம் ஆனையூர் மண்ணில் வாழ்ந்து வருகிறார்கள். அத்தான் சுழியோட மச்சான் கயிறு பிடிப்பான் என்பார்கள், அவ்வாறு அவதானமும் ஆபத்தானது தொழில் .
பெருமைக்கும் திறமைக்குமான தொழில் இன்று எம் ஊரில் மரிவி விட்டது. ஆனால் முத்து குளியல் ,சங்குக் குளியல் என்று இன்று தீவக பகுதிகளில் மிக இலாபம் ஈட்டும் வெளிநாட்டு ஏற்றுமதி தொழில்.
கடல் வணிகத்தை பொறுத்தவரைஅவர்கள் திறமையைத் தாண்டி கடல் நீரோட்டம்,காற்று,காலநிலை, நேரம் ,வான்னிலை என அனைத்தும் தெரிந்து வீரமும், துணிவும் உள்ளவர்கள் மட்டுமே இந்த தொழிலை மேற்கொள்ள முடியும். இவர்கள் கிட்டத்தட்ட ஒரு கடல் சார் பாரம்பரியம் விஞ்ஞானிகள் என்கின்றார்கள் மேற்குலகத்தார் .
இந்த முத்து குளிப்பு இன்று மிக உயர்ந்த செல்வந்தர்களின் ஆடம்பரம் பொழுதுபோக்காக மாறி இருக்கிறது.
வ்வாறே எமது முன்னோர் சுழியோடி பலர் ஊரில் இருந்தார்கள் . அவர்களினால் எமது ஆலயத்திற்கு கொடுக்கப்பட்டதே இந்த பாத்திரச் சங்கு.
எமது ஆலய உட்புற சுவரில் பதியப்பட்டு
இருந்த அந்த பாத்திர சங்கில் தான் ஆசீர்வதிக்கப்பட்ட நீரை விட்டு மக்கள்
பயன்படுத்தினார்கள். அந்த ஆசீர்வதிக்கப்பட்ட நீ உள்ள சங்கை தொடாதவர்கள் அப்போது யாரும் இல்லை .
ஆழ்கடல் சுழியோடியாக இருந்தவர்களில் சிலர் இன்று இருகிறார்கள் . மரியாதைக்குரிய அழகையா,பொலின்ரன்,
பாலையா, ஏசுரட்ணம், தேவராசா போன்றவர்களுடன் இன்னும் சிலர்.
இதைவிட நீந்துவதை நாம் பொழுது போக்காக கொண்டமையினால் ஆரம்பத்தில்
திறமை அடிப்படையிலும்,கல்வி அடிபடையிலும் எமது ஊரில் பலருக்கு பொலிஸ் வேலை கிடைத்தது பலர் சென்றனர். சிலர் அடிமை வேலை என
மீண்டும் சுழியோடியாக மாறினர்
சர்வதேச கடல் வணிக
நிறுவனம் வைத்து பாய்க்கப்பல்களைப் பயன்படுத்தி கடல் வணிகமும் செய்தார்கள் எம் மூதாதையர் என்பதற்கும் அரச பதிவுகள் சில இன்று இருகின்றது.
ஆனையூரான்