சோபா ரீச்சர் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் நேச அருள்
ஆனையூர் மக்கள் காத்து தன் உயிர் துறந்த ஈழத்து மலர் யார் அறிவார்
சோபா ரீச்சர் ஆங்கிலம் கற்பித்துக் கொண்டு
எமது ஊரை சுற்றி வந்த அழகிய சிட்டு.
பயமற்ற நேர் கொண்ட பார்வை, தேன் சொட்டும் பேச்சு
ஆங்கில புலமையில் எம் ஊர் வளர வேண்டும் என்ற அவா,
அன்பும் உருகும் உள்ள என அனைவரும் அறிவார்கள்.
அவளது இரட்டை குடும்பியாட்டமும்,
புத்தகம் நெஞ்சோரம் சேர்த்த
நிமிர்ந்த நடையும், அமைதி பேச்சும்
பார்போரை ஈர்க்கும் சிறப்புகள்.
ஆனால் அவள் அடி மனதில் சுமந்த ஈழத்து விடிவின் கனவை யாரும் அறியார்.
புலிகளின் வெளிக்கள வேவுப்பணியை ஏற்று இருந்த காலம் அது
அவள் ஆசிரியராக கிராமம் சுற்றிய ஆங்கிலகல்வி போதித்த போது
தன் பணிகளை சிறப்பாக செய்து
வந்திருந்தால்
அக்காவின் துரதிருஷ்டம் அவள் பற்றிய
தகவல் இந்திய றோவின் காதுக்கு கிடைக்கிறது.
இவள் குறிவைக்கப்படுகிறாள்.
ஒட்டுக் குழுவாகிய பிணம் தின்னிகள் அக்காவை நோக்கி
ஏவி விடப்படுகிறார்கள்.
இது இவ்வாறு
இருக்க இந்த தகவல் புலிகள் அணிக்கு
கிடைக்க மேலிடத்தில் இருந்து பறந்து வந்த செய்தி அக்கா உடன் ஊரை விட்டு வெளியேறுமாறு பணிக்கப்படுகிறது.
தகவல் ஏற்றவள் சில தினங்களுக்குள் வெளியேறுவதாக கூறிக்கொள்கிறாள்.
ஆகையால் சில தினங்கள் அக்காவின் பாதுகாப்புக்காக பிராடிகோவில் வரும் அணி மேலதிக கடைமையை பொறுப்பேற்று எம் ஊரில் நிலை கொள்கிறது.
இந்த அணியை சந்தித்த சோபா அக்கா
நீங்கள் எனக்கு என்ன நடந்தாலும் எதுவும் என் ஊரில் செய்ய வேண்டாம். நான் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறேன் .
என் ஊர் மக்கள் பலர் அப்பவிகள் என கண்டிப்பாக உத்தரவிட்டு , நான் சில தினங்களில் இடம் மாறுவேன் என கூறி அவர்களை விட்டு நகந்து செல்கிறாள்.
இந்த நிலையில் அன்று மாலை அக்கா வீடு நோட்டமிடப்படு, மறுநாள் புதன் அன்று காலை அந்தக் கோரச் சம்பவம் நிகழ்கிறது எம் ஊரில்
துரோகிகள் அக்காவின் வீடுதேடி வந்து வாசலில் நின்று அக்காவை பெயர் சொல்லி அழைத்த போது அக்காவின் அப்பா வெளியே வந்த போது வாக்குவாதத்தில் ஈடுபட்டு
அவரை அந்த வீட்டு முற்றதில் சுட்டு படுகொலை செய்து விட்டு , பின் மதிலால் தப்பி ஓடிய அக்காவை துரத்தி பிடித்து கூட்டி சென்று அடைக்கல அன்னை வரவேற்பு
மாதா சுவரோரம் இருத்தி சுட்டு கொலை செய்த பின்அந்த துரோகக் கூட்டம் தப்பித்து சென்றது.
விடுதைலை கனவுடன் சோபா அக்காவின் இறுதி மூச்சும் அந்த கனமே அடைக்கல அன்னையின் மடி கலந்தது.
அக்காவின் கட்டளையேற்று ,பொது மக்களும் தடுத்தமையால் எதுவும் செய்ய முடியாத நிலையில் அந்த சிறப்பு அணி
அமைதியாக அஞ்சலி செலுத்தி நகர்ந்தது.
அவ்வாறு சோபா அக்கா தடுக்காது விட்டால்
துரோகிகள் அக்காவை பிடித்து கொண்டு கோவில் நோக்கி நகரும்போது ஊடறுத்து தாக்கி
துரோகிகளை கொண்று அக்காவை மீட்டு இருக்க முடியும் .
ஆனால் அன்று மாலையோ
அல்லது மறுநாளோ எமது ஊர் இந்திய படையாளும் ஒட்டுக்குழுக்களாலும்
சுடுகாடாக மாற்றம் பெற்று இருக்கும்.
பல பத்து உயிர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கும்.
வீரப் பெண் சோபா
அக்கா மரணவேளையிலும் தன் உயிர்
கொடுத்து எம் ஊர் காத்த தேவதை.
உன் உயிர் தியாகச் செயலுக்கு தலை வணங்குகிறேன்.
எம் விடுதலைக்காய் ஊரில்
உயிர் கொடுத்த மூத்த பெண் விதை என தன் பெயர் பொறித்து சென்றால்.
வீரவணக்கம் அக்கா
ஆனையூரான்
No Comment! Be the first one.