வாழ்க்கை அதன் சூரியப்புள்ளி வைக்கும் முன் முதல் புள்ளி- நான் வைக்க விரும்புகிறேன் !!
நான் உம் உறவுக்காறன் என்று
சொல்வதை விட
ஊடகக்காற என்று சொல்வதே சிறப்பு !!
முந்தய நினைவுகள்
முந்திக் கொண்டு வர !!
முல்லை முற்றத்தில் முதல் குருவாக
முதலாய் பார்த்தேன் றொசான் அடிகள் உம்மை !!
மூடி வைத்த உம் விசுவாசம்
முகவரியாய் எமக்கு திறக்க !!
முந்திய உம் முத்து வியர்வையை துடைத்து ராசா நலமா என கேட்கும் ராஜாவே !!
முகம் சிரிக்கையில் இதயத்தில்
முல்லை பூ பூத்து குழுங்கும்!!
முடியாத இறை துயரங்கள் முறிந்துவிடும் இன்றும்
உம்மால் யாழ் மண்ணில் !!
முல்லைதீவில் உம் மூச்சை சுவாசித்த
பங்கு மக்கள் பாசம் கண்டு பதைத்தேன்!!
முழுநிலவாக அடைக்கல அன்னை
உன் மடியில் துயில !!
முகில்கள் போல் மதிக்கிறோம் ஜயா உம்மை இன்று !!
அகதியாய் நான் இம் மண்ணில்
அரை நிலவுகள் உம்மோடு
அந்த அருமையான நினைவு என்னோடு!!
முன்னேற துடிக்கும் வாழ்வில்
முட்டுக் கட்டை முனகல்கள் பல !!
முட்டி மோதி வென்றுவிடுவீர்
முதிர்ச்சி தரும் மொழியால் இறை அருளால், அறிவாள் !!
முக்கோடி தேவருக்கும் கிடைக்காத
முதல்வரம் ஆனையூரின் முதல் குரு நீர் !!
முதல் நிமிடமே ஓடி வந்துவிடுவீர்
துக்கமோ, மகிழ்சியோ ஆசீர் வழங்க ஆனையூர் மண்ணுக்கு !!
மூடு மந்திரமானம் தன்னம்பிக்கை கொண்டு
முந்திவிடும் தைரியத்துடன் !!
முதிர்ச்சி தரும் ஊடக பணியுடன்
இறை பணி சிறக்க இறஞ்சுகிறேன் !!
இறையாளம் என் தாய் அடைக்கல இராக்கினியிடம்
சிறக்க உம் பணி
பார் பறக்க உம் புகழ்
மிதக்க இறை பிறர் அன்பில்
***************************
இவர் 20 ஆண்டு குருத்துவ பணிவாழ்வில் முல்லைத்தீவு பங்கு தந்தையாகவும்,
யாழ் யாழ் ஆயரின் செயலாளராக ,
இளவாலை புனித ஹென்றி அரசர் கல்லூரியில் ,யாழ் பத்திரிசியார் கல்லூரி என்பவற்றில் உப அதிபராகவும் ,
தற்போது புனித வளன் கத்தோலிக்க அச்சகத்தின் முகாமையாளர் ஆகவும் ,
பாதுகாவலன் பத்திரிகையின் ஆசிரியராகவும் ,
திருத்தந்தையின் மறைபரப்பு சபைகளின் யாழ் மறைமாவட்ட இயக்குனராகவும் பணியாற்றுகின்றார்.
அடிகளார் மெய்யியலில் இளமாணி பட்டம் ,
இறையியலில் இளமாணி பட்டம் ,
மெட்ராஸ் லொயோலா கல்லூரியில் ஊடகவியலின் முதுமாணிப் பட்டமும் இப்பட்டத்தில் தங்கப் பதக்கம் பெற்றது குறிப்பிடத்தக்கது .
லண்டன் பல்கலைக்கழகத்தில் கல்வியியலில் முதுமாணி பட்டம்
இலங்கையில் கல்வியியல் டிப்ளோமா பட்டம் பெற்றுள்ளதுடன் இன்னும் பல பட்டங்கள் பெற வாழ்த்துகிறோம்.
அத்துடன் அகில இலங்கை சமாதான நீதிவானாகவும் செயற்படுகிறார்.
தமிழ் புரவலன் ஆனையூரான்
No Comment! Be the first one.