கடலில் மூழ்கும் கலத்தைக் கரைக்கு
கடத்தி வந்து சேர்த்தவள்
கலங்கி நின்ற கணத்தில் உயிரை
கடமை யென்று காத்தவள்!
முடங்கித் தவழ்ந்த முடவன் வாழ்வை
முட்டுக் கொடுத்து நின்றவள்
நடுங்கும் வெப்ப நோயில் வீழ்ந்தார்
நுகர நலத்தை ஈந்தவள்!
விதியின் பிடிக்கும் விலக்க ளித்து
விந்தை யாகும் தாயவள்
மதிய னைத்தும் மதிம யங்க
மகிமை தன்னின் வேரவள்!
அன்னை மேரி ஆளு முலகில்
ஆபத் தென்ப தில்லையே
மண்ணில் கூடும் மகிழ்ச்சி யாவும்
மாதா தரும் எல்லையே!
ஆனையூரான்
No Comment! Be the first one.