முதுமை மாறா முனியே
முத்தொளி முகத்துடன்
மனதிலே அச்சமேதுமின்றி
ஊரில் அகரமெழுதி ஆச்சி!!
செபமாலை கையுடன் ரத்தினம்
சிட்டாகப் பறந்ததும்
ஆனையூர் சுற்றத்தின்
சிந்தையதைக் கவர்ந்தவரே!!
பூட்டைத் திறப்பது கையாலே-நல்ல
மனந் திறப்பது உம் மதியாலே”
இறை பாட்டைத் திறப்பது பண்ணாலே-அன்னை
வீட்டைத் திறப்பது இந்த பெண்ணாலே!!
மணி அடித்து ஊரை எழுப்பும்
மாணவர்களின் காலை மணி தாயே
கள்ளம் கபடமின்றி கடவுளாகத் தோன்றிய உச்சிமணியே!!
கோவில் ஆச்சி என்றால் ஓடிவந்து
உதவிடும் உத்தமி
அடைக்கல அன்னை சேர்த்த சொத்து
சேவை சிகரம் நேசமணி!!
தாய் பாசம் அறியா குருக்களின்
தர்ம வீடு அம்மா நீ
உணவு கொடுத்து ஊர் காக்கும்
எம் ஊரின் அன்னசத்திரம்மா!!
காலம் பல கடந்தும்
கண்முன்னே விரியுது…
உன் பாசமான பார்வையும்
பயணித்த பால்வீதியும் நானும்!!
தமிழ் புரவலன் ஆனையூரான்