இயற்இறைமாதா இம்மையை ஊக்கும்
ஏசுவின் தாயவள் என்றும் கன்னி
ஒளிப் பேரழகில் உலகை நிறைத்தாள்
உலகைக் காக்கும் உள்ளம் படைத்தாள்
களிப்பே நல்கும் கருணை கொண்டாள்
கால சுழற்சியை காலமும் வென்றாள்!
நிலத்தோர் வாழ்வில் நீள இன்பம்
நித்திய நிலவில் நீக்கினள் துன்பம்
வளத்தேர் வலத்தை வாழ்வினில் காண
வழிதனைப் படைத்தாள் வடந்தனும் இழுத்தாள்!
தெளிவுறத் தெள்ளத் தெளிவென நிற்கும்
தெய்வத் தாயவள் திருவிடம் தேடி
வலிதனைச் சொன்னால் வழிதனும் கிட்டும்
வல்லமை சர்வம் வாழ்வினில் எட்டும்!
பயனுறப் பணிவார் பயண மகிழ்வில்
படைத்தலை ஏற்று பாரினில் வருகிற
இயற்இறைமாதா இம்மையை ஊக்கும்
ஏசுவின் தாயவள் என்றும் கன்னி!
ஆனையூரான்