இமயமென தமிழினமே இருந்தமண்
அலங்கோல நிலையினிலே அன்னை பூமி
அரவணைப்பார் யாருண்டு புரியவில்லை
சிலகாலச் சூழ்நிலையில் சிதறலாச்சு
சீறிலங்கா சிறப்புறுமா கேள்விதானே!
புலம்பெயர்ந்த தமிழனது வேட்கை
புவியெங்கும் சோகத்தை சொல்ல
களநிலையில் தனித்திட்ட கோலம்
கண்ணீரில் ஒவ்வொரு நாளும்!
இமயமென தமிழினமே இருந்தமண்
இலங்கையென எல்லோரும் சொன்னநாடு
சமயச்சதி சந்தித்த போராலின்று
சந்திக்கும் அவலத்தை மறப்போமில்லை!
காலங்கள் மாற்றத்தை காணும்
கடைகூட முதலாகச் சேரும்
ஆளவே தமிழினமும் கூடும்
அந்நாள் விரைந்துவரக் கூடும்!
No Comment! Be the first one.