பொய்யுடல் மெய்சுகம் காணும் உண்மை
பொழுதனைத் துன்பமும் தீரு முண்மை
தெய்வமுன் முன்னிலே தெரியும் பாரு
தேடியோர் ஆலயம் சென்று சேரு!
விதியெனும் வட்டமுன் விதிதான் அதையும்
மதிதனால் மாற்றலாம் மனது வைத்தால்
கதிதான் இதுவென கலங்கிப் போனால்
கையறு நிலையதே கடைசிப் புள்ளி!
படைத்தோர் அறிவரே பாவ புண்ணியம்
கடைத்தேர் காண கைதொழு வாயெனில்
உடைத்தே தகர்க்கலாம் ஊடு மெத்துயரையும்
தடையெதும் மில்லை தாயிடம் சொல்லவே!
அழைக்கிறாள் சுகமுற ஆலய தேவதை
பிழையெலாம் தவிர்த்திட பேறுநீ அடைந்திட
அடைக்கல மாகிடு அன்னை மாதாவுடன்!.
No Comment! Be the first one.