ஈழ அரசனுக்கு அகவை வாழ்த்து
நம்பிக்கைச் சுடர் நானறிந்த கதிர்
செம்மைத் தமிழரிடை
சிறப்பொக்கும் பெருந்தலைவன்
நம்மினத்து கனவுகளை
நனவாக்க உதித்தவன்
இம்மா பேருலகும்
இவன்வீரம் வியந்ததுண்டு!
வங்கப் பரப்பில்சிறு
தங்கத் தமிழ்ப்பகுதி
எங்கும் தமிழாள
சிங்களர் பகையாண்டான்
சினமறுக்க சபதமேந்தி
சிரங்கொடுத்த பிரபாகரன்
அறங்கொடுத்த ஆண்மகனே!
உறவென்றும் இனமென்றும்
ஓய்வறியா உயிர்த்துடிப்பு
வரமென்று வாய்த்த
வாழ்வினிலே போராட்டம்
இரவும் பகலும்
இடைகண்ட பொழுதினிலும்
மறவாது ஈழத்தை
மனக்கூட்டில் சுமந்தவன்!
காலம் பிரித்தாலும்
காலவெளி தடுத்தாலும்
நாளும் வாழுகிற
நாயகன் பிறந்தநாள்
வேலுப்+பிள்ளை மகன்
வேங்கையென இம்மண்ணில்
இன்றும் பிறந்திருப்பான்
நம்மினத்தை வாழவைப்பான்!
எந்தலைவன் கரி+காலன்
No Comment! Be the first one.