அச்ச மிருந்தது என்னிடத்தில்–அதை
அடகு வைத்தேனடி உன்னிடத்தில்
மிச்ச மிருக்குது ஏக்கமடி–அதை
மீட்டிடப் போச்சு தூக்கமடி!
அன்புக்கு ஏங்கிடும் யாசகன்நான்-உன்னை
அன்றன்றும் வாசிக்கும் வாசகன்நான்
கன்றுக்கு சுரக்கும் தாய்மடிநீ–இந்த
காளைக்குத் தருவாயா பூமடிநீ!
என்னில் கலந்திடும் ஜீவநதி–நித்தம்
உன்னயே துதிக்கும் எந்தன்மதி
பண்ணில் கலந்திடும் பாடலடி–உனை
பாடிடத் தேடுதென் ராகமடி!
No Comment! Be the first one.