எத்தனை கோடி இன்பம்
இத்தரணியில் வைத்தவன்!
அத்தனையும் அனுபவிக்க
ஆன்மாவைத் தந்தவன்
பூவுக்குள் தேனைப்
புகுத்தியே வைத்தவன்!
சாவுக்கு நேரத்தை
சரிபார்த்து வைத்தவன்
பாலையும் குருதியும்
பசுவுக்குள் வைத்தவன்!
பால் வீதி கோள்களை
பாதையில் வைத்தவன்!
பாறைக்குள் தேரைக்கும்
பசிக்குணவு ஈந்தவன்!
சாறை எறும்புக்கும்
சங்கேத மொழி தந்தவன்!
எழும்பி வரும் அலைகளுக்கு
எல்லைக் கோடிட்டவன்!
இள நீரில் சுவை நீரை
இதமாக வைத்தவன்!
செங்கதிரோன் உதிப்பதற்கு
சமயத்தைக் குறிப்பவன்!
அங்கத்தின் உறுப்புக்களை
ஆற்றலோடு படைத்தவன்!
புலர் பொழுதில் மலர்களுக்கு
புன்சிரிப்பைத் தந்தவன்!
மலர்களுக்கு வெவ்வேறாய்
மணம் தன்னைப் பிரித்தவன்!
கடல் நீரை மேலேற்றி
கார்முகிலுள் நிறைத்தவன்!
இடம் பார்த்துக் கனிமங்கள்
வளம் பொங்கக் கொடுத்தவன்!
குயிலுக்கும் காக்கைக்கும்
குரல் மாற்றம் தந்தவன்!
மயிலுக்குத் தோகையை
மனம் கவரப் படைத்தவன்!
வண்ணக் கலவையினை
வானவில்லில் கலந்தவன்!
எண்ணங்கள் சிறகடிக்க
இதயத்தை விரித்தவன்!
கண்ணுக்குள் பார்வையை
காட்சிக்காய் அளித்தவன்!
மண்ணுக்குள் வைரத்தை
மறைத்துனக்கு வைத்தவன்!
இரவையும் பகலையும்
இரு கூறாய்ப் பிளப்பவன்!
மரங்களை விதைகளில்
மண்ணிலே துளிர்ப்பவன்!
ஞாலத்தைப் படைத்துக்
காலத்தை விடுத்தவன்!
மூலவன் பேராற்றல்
நாம் உணர வைத்தவன்!
இயற்கை அற்புதமானது,அன்பானது
கொடூரமானது
இவ்வளவு இருந்தும்
மானிடரே திருந்துங்கள்
No Comment! Be the first one.