வான்லோக இராணி பூலோக அரசியே
விண்ணகத்தில் புனித மாது நீ தாயே
ஆனையூர் தாரகை தாயே நீ
தேரில் தேவ ஒளி வீசிடும் ஆரணி
பாவமேதுமில்லா பாவிகளின் செல்வராணி
பாதுகாத்து ஆளுவாயே நீ
ஜென்ம மாசில்லா மாதரசி
ஏழை மங்கையர் தேவி நீ
புண்ணிய மேநிறை மாது நீ
ஊரவர் போற்றிடும் தேவி நீ
உடலுள்ளம் நலமில்லை பல நோய்களே
ஊரில் பதவி மதம் கொண்ட பல பேய்களே
மடிமீது தவழும் உன் மகன் பேசினார் இங்கு
மறையாத நோய்கூட பயந்தோடுமே தாயே
யார் யாரோ துயவர் என்று நான் நம்பினேன்
நெஞ்சில் வேறேதோ எண்ணங்கள் கொண்டு அஞ்சினேன்
இல்லை மனம் அன்னைக்கா புரியாதென்று – என்
மாதா உன் பாதத்தில் இளைப்பாற்றுமே
எம் மக்களை அமைதி என்னும் பூங்காவில்
ஆனையூரான்
No Comment! Be the first one.