சிலுவை சுமக்கும் மனிதன்

மனிதனின் எல்லா செயல்களும் ….
சிலுவையாக மாறுகின்றன ….
எல்லா விளைவுகளும் ஆணியாக….
அறையப்படுகின்றன….!!!
குடும்பம் என்னும் உறவை ….
சிலுவையாய் சுமக்கிறான் ….
அன்பு என்னும் ஆணியால் …..
அறையப்படுகிறான்…..!!!
கல்வி, பதவி, என்னும் ….
சிலுவையை சுமக்கிறான் …..
அதிகாரம் என்னும் ஆணியால் …..
அறையப்படுகிறான்…..!!!
உழைப்பு, வருமானம் எனும் …
சிலுவையாய் சுமக்கிறான் ….
விரத்தி நோய் என்னும் ஆணியால் …..
அறையப்படுகிறான்…..!!!
போட்டி வெற்றி என்னும் ….
சிலுவையாய் சுமக்கிறான் ….
பகைமை ,பொறாமை ,ஆணியால் …..
அறையப்படுகிறான்…..!!!
அத்தனை சுமைகளையும் ….
சுமக்கும் மனிதனுக்கு ….
விடுதலை ஒன்றே விடுதலை ….
ஓடும் புளியம்பழம் போல் ….
வாழ்வதே விடுதலை …..!!!
முகப்புத்தகம் வழிக்கால்வாய்
ஆன்மீக கவிதை