வண்ணம் கலையா வகையில் எழுத்தில்
வாழும் கே.ஆர். டேவிட்
மண்ணில் வாழ்ந்து மறைந்தார் என்பதை
மதியும் ஏற்பதற் கில்லை!
கண்ணில் கருத்தில் கவின்மிகு பொருளாய்
இன்னும் வாழும் அவரை
தின்றான் காலன் என்பது பொய்யே
அண்ணார் வாழ்வார் நாளும்!
காலம் உடலை கண்களில் காட்டா
கனவாய் மறைத்த போதும்
நாளும் அவரும் நம்மிடை எழுத்தாய்
நலமாய் வாழ்வார் இனியும்!
புகழுரு கொண்டவர் பூமியைத் துறந்தார்
புண்ணிய ஆன்மா உலவும்
அகமதில் சேர்ந்த ஐயா உயிர்மெய்
ஆயிரம் ஆண்டிலும் நிலவும்!
கண்ணீர் நதியில் கழுவித் துயரை
கரையைச் சேர்வோம் ஒன்றி
பன்னிரு திங்களும் பணிந்து போற்றி
படைய லிடுவோம் நின்று!
எழுத்துலகில்
பண்முகம் படைத்து
மக்களைப் பரவசமாக்கிய
அற்புதக் கலைஞன் நீ
இன்முகம் காட்டி குழந்தையும்
வசிகரிக்கும் மாயம் யாருக்கு வரும்…….!
இந்நாட்டு இலக்கியத்தில்
உன் பெயர் நிலைக்கும்
K R டேவிட் என்றே நினைவில் நிற்பாய்.
புனிதமான உன் ஆத்மா சாந்தி பெறட்டும்
அவரது குடும்பத்தாருக்கு
ஆழ்ந்த இரங்கல்
ஆனையூரான்